sep 22 2013 

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது

சென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் துவங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வரை தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர், திரைப்படத்துறையில் சாதனை படைத்த 56 பேருக்கு விருது வழங்கி கவுரவித்தார். அவர்களின் பெயர் வருமாறு:– 

நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், பிரபு, விவேக்,

நடிகைகள் சரோஜா தேவி, மனோரமா, எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ, சாரதா, காஞ்சனா, ஜமுனா, கிருஷ்ணகுமாரி, சவுகார் ஜானகி, மீனா, சிம்ரன், திரிஷா, ஜெயசுதா, ஜெயபிரதா,

ஏவி.எம். ஸ்டூடியோ சார்பில் ஏவி.எம். சரவணன், பிரசாத் ஸ்டூடியோ சார்பில் ரமேஷ் பிரசாத், விஜயா புரடெக்ஷன் சார்பில் வெங்கட்ராம ரெட்டி, ஆனந்தா எல்.சுரேஷ் (வினியோகஸ்தர்), ஜோகர் (கோவை டிலைட் தியேட்டர்),

டைரக்டர்கள் சி.பி.ராஜேந்திரன், மகேந்திரன், பி.வாசு, 

இசையமைப்பாளர் இளையராஜா, வயலின் கலைஞர் என்.சுப்பிரமணியம், பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி,

பாடலாசிரியர் புலமைப்பித்தன், வசனகர்த்தா ஆரூர்தாஸ்,

ஒளிப்பதிவாளர் பாபு, எடிட்டர் விட்டல், டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் சார்பில் அவருடைய மகன் ராஜூசுந்தரம், தாரா, ஸ்டண்ட் கலைஞர் கே.எஸ்.மாதவன், ஒலிப்பதிவாளர் கண்ணன், மேக்கப் மேன் சி.மாதவராவ், ஆடை வடிவமைப்பாளர் கொண்டையா, தொழில்நுட்ப கலைஞர் சாமிக்கண்ணு, ஸ்டில் போட்டோகிராபர் ஏ.சங்கர்ராவ், பின்னணி குரல் கலைஞர் கே.என்.காளை, அனுராதா, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், படஅதிபர் ஆர்.பி.சவுத்ரி, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, நடிகைகள் தயாரிப்பு நிர்வாகி என்.ராமதுரை, லைட்மேன் வி.சுந்தரம், சக நடிகர் ஏ.ராமராவ், சினி ஏஜெண்ட் ஜி.ஆறுமுகம், செட் டிசைனர் வி.துரை, தயாரிப்பு உதவியாளர் சி.என்.சுந்தரம், உடல்நிலை குறைவு காரணமாக விழாவுக்கு வர முடியாததால் நடிகை பி.எஸ்.சரோஜாவுக்குரிய விருது அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விருதுகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா சுமார் 40 நிமிடங்கள் நின்று கொண்டே வழங்கினார். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் நினைவு பரிசு வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் பல பிரமுகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். விழா இறுதியில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளர் எல்.சுரேஷ் நன்றி கூறினார். தொடக்க விழா நிறைவடைந்ததை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த கலை நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர்கள், நடிகைகள் நடனமாடினர். விழாவில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சத்யராஜ், சிலம்பரசன், தனுஷ், கார்த்தி, ஷாம், விஷால், அர்ஜுன், பரத், அதர்வா, ஆர்யா, சந்தானம். நடிகைகள் அனுஷ்கா, திரிஷா, அமலாபால், ஹன்சிகா, தன்சிகா, ராதா, கார்த்திகா, துளசி, ரோஜா, தேவயானி, டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாலா, தங்கர்பச்சான், சசிகுமார், சமுத்திரகனி, தரணி, பேரரசு, மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

 .